Home /News /national /

பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்

பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்

மோடி, தமிழிசை

மோடி, தமிழிசை

புதுச்சேரிக்கு 100% மத்திய மானியங்களை வழங்க வேண்டும் என பிரதமர், மத்திய நிதி அமைச்சரரைச் சந்தித்து தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி  துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்  சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது, புதுச்சேரி வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.

புதுச்சேரி மாநில வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்தசந்திப்பின் போது, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமரின் தலைமையிலான மத்திய அரசும் மத்திய நீதித்துறையும் புதுச்சேரிக்கு அளித்துவரும் ஒத்துழைப்பிற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், மத்திய அரசு 2022-23 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில், “மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டத்தின் வரம்பிற்குள் புதுச்சேரியைச் சேர்க்க வேண்டும்.

பிரம்மா மகளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பாடம் நடத்திய பேராசிரியர்- எதிர்ப்பைத் தொடர்ந்து பணியிடை நீக்கம்

புதுச்சேரியின் குறைந்த வளங்களையும் நிதி ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கான மத்திய உதவியை நீட்டிக்க வேண்டும். இல்லையெனில், மற்ற யூனியன் பிரதேசங்களுக்குச் செய்வது போல, CSSன் கீழ் 100% மத்திய மானியங்களை வழங்க வேண்டும்.

மத்திய அரசின் உதவி நீட்டிக்கப்படாவிட்டால், ஜிஎஸ்டி இழப்பை ஈடுசெய்யும் வகையில், 2022-23 நிதியாண்டில் மத்திய உதவியை ரூ. 3,400 கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான நிதி உதவியை நிதி அமைச்சகம் வழங்க வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார்.
Published by:Karthick S
First published:

Tags: Tamilisai Soundararajan

அடுத்த செய்தி