கர்ப்பிணிகளுக்கு சத்துணவு திட்டம் - ஆளுநர் தமிழிசை ஒப்புதல்!

 துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

அரசு மருத்துவமனைக்கு வந்து பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு தான் சத்து பரிசு பெட்டகம் அளிக்கப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கர்ப்பிணிகளுக்குச் சத்து பொருட்கள் கொண்ட பரிசு பெட்டகமாக சத்துணவு திட்டம் துவங்க ஒப்புதல் அளித்திருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுகாதாரத்துறையும் பாரதிதாசன் அரசு கல்லூரியும் இணைந்து 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி நடத்தி வருகிறது. இம்முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய  அவர், கல்லூரி மாணவிகளே தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டுவது வருத்தமாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி யாரையும் தடுப்பூசி போட வைக்க முடியாது. மருத்துவக் கல்லூரிகளில்  ஆசிரியர்களும் மாணவர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டப்பிறகே கல்லூரி திறக்க அனுமதிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே போல் பிற கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டால் தான் கல்லூரி திறக்கப்படும் என்றார். தமிழிசை பேசி முடித்தவுடன பேராசிரியர் ஒருவர் எழுந்து தடுப்பூசி போடுவதை ஏன் கட்டாயமாக்க கூடாது, கல்லூரியிலேயே 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். 6 ஆயிரம் பேர் தினமும் வந்து செல்கின்றனர்.  இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என கூறினார்.

அதற்கு பதில் அளித்த  தமிழிசை, ஜனநாயக நாட்டில் எதையும் கட்டாயப்படுத்த கூடாது உலக சுகாதார நிறுவனமும் கட்டாயபடுத்த கூடாது என அறிவுறுத்தி உள்ளது. அதனால் தான் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பிரதமர் கூட 40 கோடி பேர் தடுப்பூசி போட்டு பாகுபலியாக மாறியுள்ளனர் என கூறியுள்ளார். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலியாக மாற வேண்டும் என்றார்.

பெண்களுக்கு சமூதாயத்தில நிறைய சவால்கள் உள்ளது இதனை தாண்டிதான் வெற்றி பெற வேண்டும் ஆண்களை விட பெண்கள் அதிக சவால்களை சந்திக்கின்றனர், தடுப்பூசி முகவர்களாகவும் தூதுவர்களாகவும் மாணவிகள் பணியாற்ற வேண்டும். அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினரை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

தடுப்பூசி ஆரம்பிக்கப்பட்ட பிறகு நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் இறந்தார் இதனால் தமிழகம் புதுவையில் தடுப்பூசி மீதான அச்சம் ஏற்பட்டது. இது தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கயை குறைந்தது. கல்லூரி மாணவிகள்தடுப்பூசி  தூதுவர்களாக மாற வேண்டும். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என 2 வாழ்க்கை உள்ளது.

இதனால் அவர்கள் தங்களது உடல் நலத்தை பேண வேண்டும். வீட்டில் உள்ள ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும உடல்நிலை சரியில்லை என்றால் பதறிவிடுவார்கள் ஆனால் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பெரிதுபடுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக்கொள்கின்றனர்.அதனால் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

Also read... பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் கொரோனா நோய் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.குழந்தைகள் பாதிப்பும் குறைந்து விட்டது.அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. கர்ப்பிணிகளுக்கு சத்துணவு திட்டம் துவங்க ஒப்புதல் அளித்திருப்பதாக கூறிய அவர், சத்து பொருட்கள் கொண்ட பரிசு பெட்டகமாக இருக்கும்.

அரசு மருத்துவமனைக்கு வந்து பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு தான் சத்து பரிசு பெட்டகம் அளிக்கப்படும். இரண்டாவது குழந்தைக்கும் உண்டு என்றார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார்,  பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக அவருக்கு தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கல்லூரியில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு கவர்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: