Home /News /national /

புத்தகம் படிக்கும் பழக்கத்தால் என்னை புதுப்பித்துக் கொள்கிறேன்: தமிழிசை சௌந்தரராஜன்

புத்தகம் படிக்கும் பழக்கத்தால் என்னை புதுப்பித்துக் கொள்கிறேன்: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

புத்தக கண்காட்சியில் நிறைவு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

புதுச்சேரியில் நடைபெற்ற 25வது தேசிய புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புத்தகம் படிக்கும் பழக்கத்தால் தன்னை தினந்தோறும் புதுப்பித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

புதுச்சேரியில்  25 ஆவது தேசிய புத்தக கண்காட்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளான இன்று புத்தக கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்,  முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கடந்த 25 ஆண்டுகளாக புத்தக கண்காட்சியில் பங்கேற்றதற்காக பல்வேறு புத்தக மதிப்பீட்டாளர் நிறுவனங்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,
பள்ளி மாணவர்கள் பள்ளி புத்தகத்தை மட்டுமின்றி அதையும் தாண்டி நிறைய புத்தகங்கள் படித்து தங்களுடைய சிந்தனைகளையும் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கப் படிக்க அறிவு வளரும் என்பார்கள். அது போன்று மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

“தற்போது கொரோனா வைரஸ் பரவல் காலம் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். நமது துணைநிலை ஆளுநரும் இதையேதான் வலியுறுத்தி வருகிறார். ஒரு தடுப்பூசி நான் எடுத்துக் கொள்ளாததால் பல ஊசிகள் எனக்கு செலுத்தினார்கள். எனவே கொரோனா என்பது மிகவும் கொடிய நோய். அதிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பு செலுத்திகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட அவர் தடுப்பூசி என்பது கடவுள் கொடுத்த வரம் அதை அனைவரும் செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



அடுத்து  பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,
தடுப்பூசியை புதுச்சேரியில் கட்டாயமாக்கவில்லை. அதேவேளையில் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஒரு சில அமைப்புகள் தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்களை அறிவிக்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளது. கொரோனாவுடன் போராட வேண்டாம் என்றுதான் அரசு சொல்கிறது. எனவே அனைவரும் தடுப்பு செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: ஓமைக்ரான் பரவல்: கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்; புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை


“இந்த புத்தக கண்காட்சி புதுச்சேரியில் நடைபெறுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. 25 ஆண்டுகளாக நடைபெறும் புத்தக கண்காட்சியில் பங்கேற்றுள்ள நிறுவனங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களும் அதுபோல் படிக்கும் பழக்கத்தை இளமையிலேயே அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். புத்தகம் படிக்கும் பழக்கம் நம்மை பண்படுத்தும் வழிநடத்தும். புத்தகங்கள் நல்ல பாடத்தைச் அனுபவத்தையும் கற்றுக் கொடுக்கும்.

மேலும் படிக்க: ஓமைக்ரான் பரவல்: 4 பேர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வருகை


புத்தகம் படிக்கும் பழக்கத்தால் தினந்தோறும் என்னை புதுப்பித்துக் கொண்டு வருகிறேன்.அனைவரும் வீடு கட்டும் போது ஒரு படிப்பறை அல்லது படிப்பதற்கான இடம் வைத்து கட்ட வேண்டும். அது வீட்டில் உள்ளவர்களிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும்.கிராமங்கள் தோறும் படிப்பதற்கான நூலகங்கள் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் படிப்பதற்கான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது எனது விருப்பம். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு, முகக் கவசம் அணிந்து கொண்டு புத்தாண்டு, பொங்கல் விழாக்களை சிறப்பாக கொண்டாடுங்கள். தடுப்பூசி மட்டுமே கொரோனாவிலிருந்து மக்களைக் பாதுகாக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
Published by:Murugesh M
First published:

Tags: Book reading, Pudhucherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி