புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
ஆளுநர் மாளிகையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது தமிழகத்தில் பரபரப்பாகியுள்ளது. ஆனால் புதுச்சேரியில் எளிய முறையில் ஆளுநர் மாளிகை ஊழியர்களை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டது.
தமிழக சர்ச்சை புதுச்சேரியில் ஏற்பட்டு விட கூடாது மற்றும் போதிய நேரமின்மை காரணமாக எளிய முறையில் ஊழியர்களை கொண்டே புதுச்சேரியில் கொண்டாட்டம் நடந்தது.
தமிழ்ப் புத்தாண்டு, துணைநிலை ஆளுநர் மாளிகையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களைக் தெரிவித்துக் கொண்டார்.
அங்குள்ள பெருமாள் சன்னதியில் காலை சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு விருந்து அளிக்கப்பட்டது. சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல் ஆகியவற்றை ஊழியர்களுக்கு தமிழிசையே பரிமாறினார்.
தமிழ் - கேரள புத்தாண்டையொட்டி துணைநிலை ஆளுநர் தமிழிசை வாழ்த்துச் செய்திவெளியிட்டுள்ளார். அதில், சித்திரை மாதத்தின் தொடக்கமான தமிழ்ப் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கைகளை, எதிர்ப்பார்ப்புகளைத் தருகிறது.
இந்த மகிழ்ச்சியான நன்நாளில் தமிழகம் - புதுச்சேரி மற்றும் உலகமெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போன்று, கேரள நாட்காட்டியின் முதல் நாள் “விஷு“ திருநாளாகக் கேரளப் பாரம்பரியத்தோடு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலைக்கவும் இன்பமும், மகிழ்ச்சியும் பெருகவும், கொரோனா இல்லாத ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும் என தமிழிசை அறிக்கையில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.