ஹோம் /நியூஸ் /இந்தியா /

இவ்வளவு குறைவா?? பெட்ரோல், டீசல் போட புதுச்சேரிக்கு படையெடுக்கும் தமிழக வாகன ஓட்டிகள்!!

இவ்வளவு குறைவா?? பெட்ரோல், டீசல் போட புதுச்சேரிக்கு படையெடுக்கும் தமிழக வாகன ஓட்டிகள்!!

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

தமிழகத்தை விட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. அங்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.94.94-க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.83.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் டீசல் விலை நேற்றைய விலையை விட 19 ரூபாய் வரை குறைவாக விற்பனை செய்யப்படுவதால், கடலூர், விழுப்புரம் உட்பட தமிழக எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் அங்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்துள்ளது. இதனால், தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.40 காசுகளுக்கும், டீசல் ரூ.91.43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் மத்திய அரசின் வரி குறைப்போடு கூடுதலாக, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை, 7 ரூபாய் குறைத்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதனால், புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ. 12.85 காசுகள் குறைந்து ரூ.94.94 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.6.46 காசும், டீசல் விலை ரூ.7.85 காசும் குறைவாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, தமிழக எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் மற்றும் டீசல் போடுவதற்காக புதுச்சேரிக்கு படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து, ஏராளமானனோர் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வாகனத்தின் டேங்கை நிரப்பிக்கொண்டு திரும்பி வருகின்றனர்.

First published:

Tags: Petrol Diesel Price, Puducherry