தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை நாளை முதல் பள்ளிகளை மூட உத்தரவு...

பள்ளி மாணவிகள்

கொரோனா பரவல் காரணமாக, நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால், கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட்டன. அதேபோன்று, பிப்ரவரி 8-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கின. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

  அதன்படி, இந்த மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளார். அத்துடன், 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 12-ம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பொதுத்தேர்வு வரை கொரோனா விதிமுறைகளை பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதனிடையே, தமிழ்நாடு மாநில கல்வி வாரியத்தை தவிர சிபிஎஸ்இ போன்ற இதர வாரிய பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள், பொதுத் தேர்வுகளை கொரோனா விதிமுறையை பின்பற்றி தொடரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... Exclusive : கொரோனா பரவல் குறித்து உண்மையை கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

  அத்துடன், அதற்கான சிறப்பு வகுப்புகள் மற்றும் விடுதிகள் செயல்படலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: