கடலுக்கடியில் வாகனங்கள்: மீன்வளத்தைப் பெருக்க புதுவை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் புதிய முயற்சி (புகைப்படங்கள்)

கடலுக்கடியில் வாகனங்களை இறக்கி மீன்வளத்தைப் பெருக்க புதுவை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் முயற்சி செய்து வருகிறார்.

கடலுக்கடியில் வாகனங்கள்: மீன்வளத்தைப் பெருக்க புதுவை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் புதிய முயற்சி (புகைப்படங்கள்)
மீன்வளத்தைப் பெருக்க புதுவை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் முயற்சி
  • Share this:
கடல் வளத்தைப் பெருக்க உலக நாடுகள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆழமான கடலுக்கடியில் மீன்கள் அதிகளவில் இனவிருத்தி செய்வதில்லை என்பதால் அங்கு செயற்கை பவளப் பாறைகளை அமைக்கும் முயற்சியில் பல நாடுகளும் இறங்கியுள்ளன.

பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பல், போர் விமானம் மற்றும் ராணுவ டாங்கிகளை முழுவதும் தூய்மை செய்து பல நாடுகள் கடலில் இறக்கிவிடுகின்றன. இவற்றில் நாளடைவில் கடல்பாசி, சங்கு மற்றும் சிப்பி  படிவதால் அவை பவளப்பாறையாக மாறுகின்றன. இந்த மாதிரியான பவளப்பாறைகள் மீன்கள் வாழ்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் உகந்த இடமாகிறது.

இது போன்ற ஒரு முயற்சியை தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாய் அரசின் அனுமதியோடு நடவடிக்கையை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியளிக்கும் புதுச்சேரியில் ’டெம்பிள் அட்வஞ்சர்’ என்னும் தனியார் நிறுவன உரிமையாளர் அரவிந்த் செய்து வருகிறார்.


கடலுக்கடியில் இறக்கப்படும் ஹாலோ பிளாக் எனும் சிமெண்ட் கட்டைகள்.


கடலுக்கடியில் வாகனங்களை இறக்கி மீன்வளத்தைப் பெருக்க முயற்சி.


கடலுக்கடியில் வாகனங்களை இறக்கி மீன்வளத்தைப் பெருக்க முயற்சி.
Also see:

கடலுக்கடியில் ஹாலோ பிளாக் எனும் சிமெண்ட் கட்டைகளை நடுக்கடலில் இவர் இறக்கி வருகிறார். முதன்முறையாக புதுச்சேரியில்  மீன்வளத்துறையின் அனுமதியுடன் இவர் பழைய கார் ஒன்றை கடலில் இறக்கியுள்ளார். தனது பழைய காரின் பிளாஸ்டிக் பாகங்களை அகற்றிவிட்டு, பெயிண்ட்டை முழுமையாக சுரண்டி விட்டு வெறும் எலும்புக் கூடாக காரை 6 கி.மீ தூரத்தில் கடலில் இறக்கியுள்ளார்.

வெளிநாடுகளில் பெரியபெரிய வாகனங்களை இறக்குவது போல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் இறக்கினால் கடல்வளம் பெறும் எனக் கூறுகிறார் இந்த ஆழ்கடல் நீச்சல் வீரர். அடுத்ததாக புதுச்சேரி கடலுக்கடியில் வேன், கார்கள், பைக் போன்ற வாகனங்களை இறக்கி மீன்வளத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட இவர் திட்டமிட்டுள்ளார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading