திமுக மீது உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்... அதிமுக வலியுறுத்தல்

நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் குறை கூறிய திமுக, திக, விசிக மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அதிமுக,என்.ஆர்.காங் ,பாஜகவினர் தெரிவித்துள்ளது.

நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் குறை கூறிய திமுக, திக, விசிக மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அதிமுக,என்.ஆர்.காங் ,பாஜகவினர் தெரிவித்துள்ளது.

  • Share this:
புதுச்சேரியில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயலாளர் அன்பழகன், பாஜக பொது செயலாளர் செல்வம் எம்எல்ஏ, என்.ஆர்.காங் செயலாளர் ஜெயபால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, “  தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சராக பொறுப்பேற்ற என்.ஆர் ரங்கசாமி பூரண குணமடைந்து புதுச்சேரிக்கு திரும்பி வந்து மக்களின் நலனுக்காக சேவை செய்ய வேண்டும். இணக்கமான அரசு அமைய வேண்டும் என்றுதான் தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்வு செய்தோம்.

மக்களும் எங்கள் கூட்டணியை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தினம் புதுச்சேரியில் மத்திய அரசு 3 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்த விவகாரத்தில் திமுக,
திராவிட கழகம், விசிக உள்ளிட்ட கட்சியினர் குறைகூறி வருகின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்”  என்றனர்.

மேலும், “ நியமன எம்.எல்.ஏ. விவகாரம் குறித்து பேச திமுகவிற்கு அருகதை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் குறை கூறிய திமுக, திக, விசிக மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுப்போம். எங்களின் கூட்டணி குடும்பத்தில் தலையிட இவர்கள் யார்...? குழப்பத்தை விளைவிப்பதை இவர்கள் நிறுத்திகொள்ள வேண்டும்.
முதலமைச்சர் ரங்கசாமி பூரண குணமடைந்து வந்து இந்த குழப்பத்திற்கு எல்லாம் பதில் அளிப்பார்” என்று ல்கூறினர்.

மேலும் படிக்க... Today Headlines News in Tamil: இன்றைய மதியம் தலைப்புச் செய்திகள் 

மேலும், ” நியமன எம்எல்ஏ விவகாரம் என்பது கூட்டணிக்குள் இருக்கும் பிரச்னை. இதனை நாங்கள் பேசி தீர்த்து கொள்வோம். இதில் அண்டை மாநில தலைவர்கள் தலையிட தேவையில்லை.
இதில் தலையிட திமுக உட்பட அந்த எதிர்கட்சிகளுக்கும் உரிமை இல்லை” என்றனர்

புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வருவதை தடுக்க தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து கூற வரவில்லை. துணைநிலை ஆளுநர் உடனடியாக அங்கீகரிக்கப்ட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி கொரோனா நோயை போர்க்கால அடிப்படையில் தடுக்க ஆலோசனைகளை பெற வேண்டும் என்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: