• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவிலுக்கு அருகே செயல்படும் மதுக்கூடத்தை மூட உச்ச நீதிமன்றம் மறுப்பு: காரணம் என்ன?

கோவிலுக்கு அருகே செயல்படும் மதுக்கூடத்தை மூட உச்ச நீதிமன்றம் மறுப்பு: காரணம் என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

500 மீட்டர் தொலைவில் மதுப்பானக் கூடம்  செயல்பட்டாலும் குடித்துவிட்டு கோவிலுக்கு வருபவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தனியார் பாரை மூட உத்தரவிட மறுத்து தெரிவித்து தீர்ப்பளித்தது.

  • Share this:
    புதுச்சேரியில் கோவிலுக்கு 120 மீட்டர் தொலையில் இயங்கிவரும் மதுபானக் கூடத்தை மூட உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    புதுச்சேரியில்  உள்ள துரௌபதி அம்மன் கோவில்  அருகே 114.5 மீட்டர் தொலையில்  தனியாருக்கு சொந்தமான மதுபானக் கூடம் இயங்கி வருகிறது.  இந்த மதுபானக் கூடத்தில்  மது அருந்த வருபவர்கள் கோவில் அருகே கலாட்டாவில் ஈடுபடுவதாகவும் மதுப்பானக் கூடத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    எனினும், மதுபானக் கூடத்துக்கும் கோவிலுக்கும்  இடையே 100 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் 114 மீட்டர் தொலைவில் உள்ளதால் மதுக்கூடம் செயல்பட தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நீதிபதிகள்  டி.ஒய். சந்திரசூட் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மது அருந்திவிட்டு பலரும் கலாட்டாவில் ஈடுபடுவதால் கோவிலுக்கு வருபவர்களால் வழிபாடு நடத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மதுக்கடையை மூட உத்தரவிடவில்லை என்றாலும்  வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியாவது உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.120ஐ கடந்தது!


    அப்போது நீதிபதிகள், மத நம்பிக்கையில் தலையிடுவது தங்களது நோக்கம் அல்ல என்றும் அதேவேளையில், விதியை கடைபிடித்து மதுபானக் கூடம்  செயல்படும்போது சட்டத்திற்கு உட்பட்ட எதுவும் செய்ய முடியாது. மேலும், மதுபானக்கூடம் செயல்படுவது தொடர்பாக கோவில் நிர்வாகம் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும், 500 மீட்டர் தொலைவில் மதுப்பானக் கூடம்  செயல்பட்டாலும் குடித்துவிட்டு கோவிலுக்கு வருபவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடதான் செய்வார்களென்றும் கூறிய நீதிமன்றம், மதுபானக் கூடத்தை மூடவேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும் படிக்க: அருணாச்சல பிரதேசத்தில் கருப்பாக மாறிய ஆறு... ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு: சீனா காரணமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: