Home /News /national /

ஈஸ்டர் பெருநாள்: பட்டு வேட்டி அங்கவஸ்திரத்தில் ஏசுநாதர்

ஈஸ்டர் பெருநாள்: பட்டு வேட்டி அங்கவஸ்திரத்தில் ஏசுநாதர்

Easter | ஈஸ்டர் பெருநாளையொட்டி புதுச்சேரியில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு திருப்பலிகள் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Easter | ஈஸ்டர் பெருநாளையொட்டி புதுச்சேரியில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு திருப்பலிகள் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Easter | ஈஸ்டர் பெருநாளையொட்டி புதுச்சேரியில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு திருப்பலிகள் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இயேசு உயிர்த்ததை நினைவு கூறும் ஈஸ்டர் பெருநாள், இன்று கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள ஜென்மராக்கினி மாதா கோயில், இருதய ஆண்டவர் ஆலயம், வில்லியனூர் மாதா கோயில், அந்தோணியார் ஆலயம் ஆகியவற்றில்  நள்ளிரவு சிறப்பு திருப்பலியுடன் பிரார்த்தனைகள் நடந்தன.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததன் மூலம் அவர் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே எடுத்து கொண்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வு தேவாலயங்களில் நடத்தப்பட்டது. நள்ளிரவு திருப்பலிகள் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜென்மராக்கினி தேவாலயத்தில் பட்டு வேட்டி- சட்டை  அங்கவஸ்தரத்தில் இயேசு கிறிஸ்து காட்சியளித்தார்.

    ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தி தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்வது வழக்கம். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வர். ஈஸ்டர் பண்டிகையை யொட்டி புதுச்சேரி வாழ் கிறிஸ்துவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில்,வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு அன்பையும், அமைதியையும், இளைப்பாறுதலையும் வழங்கும் கருணாமூர்த்தியாகிய ஏசுபிரான்  மீண்டும் உயிர்த்தெழுந்த மகிமையை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    ஏசுபிரான் போதனைகள் மனிதகுலத்துக்கு வழிகாட்டுகிறது. கடும் துன்பம், துயரங்கள், சோதனைகளை கடந்து புதிய ஒளிப்பிரவாகமாக  இயேசு உயிர்த்தெழுந்த புனிதநாள். இந்தநாள் நமக்கு உறுதி, நம்பிக்கை, புது வாழ்வை தரட்டும். அவர் போதித்த கருணை, இரக்கம் நம்  அனைவரின் நெஞ்சங்களிலும் நிலை கொள்ளட்டும்’ என  தெரிவித்துள்ளார்.

    இதே போல்  திமுக அமைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் விதமாக  கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஈஸ்டர் ஆகும். இது கிறிஸ்தவ வழிபாட்டில் மிக முக்கியமான திருநாளாகும். ஈஸ்டரில்  நாம் என்ன நினைத்து வழிபடுகிறோமோ, அதற்கு உயிர்ப்பு கிடைக்கும். அந்த உயிர்ப்பின் மூலம் வழிபடுகின்றவர்கள் அனைவருக்கும் உற்சாகம் கிடைக்கும். சமூகத்தில் மறைந்து வரும் நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும், உண்மையான நட்பிற்கும், நல்லொழுக்கத்திற்கும்  உயிர்ப்பு கொடுக்கும் வகையில் ஈஸ்டர் பண்டிகையில் வழிபடுவோம் என கூறியுள்ளார்.

    Read More : ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்.. சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

    கிழக்கு மாநில அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர், முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் புதுச்சேரியில்  வாழும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனப்படும் புனிதரின் உயிர்ப்பு நாள்  வாழ்த்துக்கள்.மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்கி, பாவங்களிலிருந்து விடுவித்து, ஏமாற்றுக்காரர்கள், மோசடிக்காரர்கள், சதிகாரர்களிடமிருந்து ஏசு பிரான் நம்மை காத்து நல்வழி  காட்டுவார் என நம்பிக்கை கொள்வோம் என கூறியுள்ளார்.
    Published by:Elakiya J
    First published:

    Tags: Christ Church, Christianity

    அடுத்த செய்தி