Home /News /national /

புதுச்சேரியில் தடையின்றி நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழா

புதுச்சேரியில் தடையின்றி நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழா

சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

Sorgavasal thirappu : புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு  சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் வழிபாட்டு தளங்களுக்கு சென்று மக்கள் தடை இல்லை. இதனால் புதுச்சேரியில் வழக்கமான நடவடிக்கைகளுடன் சொர்க்கவாசல் திறப்பு விழா அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெற்றது. நகரின் காந்தி வீதியில் புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு  சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறந்தவுடன் முதலில் உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சொர்க்க வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்குகாட்சி அளித்தனர். அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் "கோவிந்தா...கோவிந்தா" என கோஷம் எழுப்பி வழிபட்டனர். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என  கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தனர். இருப்பினும் பல கோயில்களில் இவை பின்பற்றப்படவில்லை. மக்கள் அதிக அளவில் கூடி தரிசனம் செய்தனர்.

ஏன் சொர்க்க வாசல்...?

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் தேவர்கள் திணறினர் . அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார்.

ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். “பகவானே… தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள்கருணை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். அவதார புருஷரான பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மது, கைடபர் என்ற அரக்க சகோதரர்களுக்கும் கூட, பெருமாள் வைகுண்டத்தின் கதவை திறந்து தன் உலகிற்கு அவர்களை அழைத்துக் கொண்டார்.

Read More : தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம், காலம் குறித்த முழு தகவல்கள்...

அதை அனுபவித்த அரக்கர்கள் தங்களுக்கு கிடைத்த பேறு உலகில் உள்ள அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி இறைவனிடம் “வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும், அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

Must Read : போகி பண்டிகை: உற்சாகமாக கொண்டாடும் பொதுமக்கள்

அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் (மோட்சவாசல்) திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. அந்த வாசல் வழியே வந்து பெருமாளை வணங்குவது வழக்கமாயிற்று.
Published by:Suresh V
First published:

Tags: Temple, Vaikunda ekadasi

அடுத்த செய்தி