Home /News /national /

சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூ-டியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியார்கள் போராட்டம்..

சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூ-டியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியார்கள் போராட்டம்..

puducherry

puducherry

Puducherry: சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்திய யூ-டியூபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - சிவனடியார்கள் சாலைமறியல்...

சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூ-டியூபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய  யூ-டியூபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சிவனடியார்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த சம்பவத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சுமார் 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அவர்களை கலைந்து செல்ல போலீஸ் கூறவே ஆவேசமடைந்த சிவனடியார்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையம் செல்லும் பேருந்து தடைபட்டன. இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர் இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறும்போது..

தொடர்ந்து தமிழகத்தில் இந்து கடவுள்களை இழிவு படுத்தி யூடியூப் சேனல்களில் வீடியோக்கள் வெளிவருகிறது. ஆனால் அரசிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே உடனடியாக U2 BRUTUS சேனல் நிர்வாகி மைனர் விஜய்யை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர்கள் அப்படி இல்லாத பட்சத்தில் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
Published by:Arun
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி