Home /News /national /

பாடகர் SPB-க்காக 6 டன் எடை கொண்ட பாறையை குடைந்து சிலை..!

பாடகர் SPB-க்காக 6 டன் எடை கொண்ட பாறையை குடைந்து சிலை..!

எஸ்.பி.பி

எஸ்.பி.பி

SP Balasubramanyam: தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020 செப்டம்பர் மாதம் காலமானார்.

  • News18
  • Last Updated :


எஸ்.பி.பி.க்கு 6 டன் எடையிலான பாறை சிலை புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு நினைவகத்திற்கு அனுப்பப்பட்டது.


தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020 செப்டம்பர் மாதம் காலமானார். அவருக்கு வயது 74.  காஞ்சிபுரம் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்த  பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்து செயல்படுத்தி வருகிறார். ஓராண்டாக நடைபெற்று வரும் இப்பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இவ்விடத்தில் 6 டன் எடை கொண்ட பாறையில் எஸ்.பி.பி.யின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


Also read... புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியருக்கு செவாலியே விருது வழங்கி கௌரவித்த பிரான்ஸ் அரசு


இதனை புதுச்சேரி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் உள்ள சிற்ப கூடத்தில் சிற்பிகள் உருவாக்கி வருகின்றனர். புதுச்சேரி அருகேயுள்ள திருவக்கரையில் இதற்கான 6 டன் எடையில் பாறை எடுக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாய் பாறை சிலை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம்,"SARVE JANAASSU JANA BHAVANTHU... SARVESU JANAA SSUKINO BHAVAN"என அடிக்கடி உச்சரிக்கும் சொல் இதில் பதிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry, Spb

அடுத்த செய்தி