புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் உயர்கிறது

சினிமா படப்பிடிப்பு

புதுச்சேரியில் சினிமா, டிவி சீரியல் படப்பிடிப்புக்கான கட்டணத்தை உயர்த்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தந்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி அரசிடமிருந்து கடந்த 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 32 கோப்புகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.  குறிப்பாக சினிமா படப்பிடிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் கோப்பும் அதில் இருந்தது.

ஏராளமான படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடப்பது வழக்கம். பல மொழி படங்களும் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். மிக குறைந்த கட்டணம் நிர்ணயித்திருந்ததும் ஒரு காரணமாக இருந்து வந்தது. இக்கட்டணத்தை உயர்த்த பல தரப்பும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு உயர்த்தாமல் இருந்தது.

சினிமா படப்பிடிப்பு


இந்த நிலையில் கொரோனா காலம் தொடங்கிய பிறகு நடிகர் விஜயை தவிர வேறு யாரும் புதுச்சேரிக்கு கொரோனா நிதி தரவில்லை. கொரோனா காலத்திலும் பெட்ரோல், டீசல், மதுபானங்களுக்கு வரிகள் உயர்த்தப்பட்டன. மின்கட்டணமும் உயர்ந்தது.

இச்சூழலில் புதுச்சேரியில் சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புக்கான கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்தது. அதுதொடர்பாக  திருத்தப்பட்ட கட்டணத்துக்கும் அனுமதி கோரி துணைநிலை ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பினர். அக்கோப்புக்கு கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார்.

மேலும் படிக்க...தாத்தா, பாட்டி தினத்தன்று ஏக்கத்துடன் புகைப்படத்தை பகிர்ந்த கமலா ஹாரிஸ்இதையடுத்து விரைவில் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட ஷூட்டிங் கட்டணங்களுக்கான அறிவிப்புகளை அரசு அமைச்சரவையில் வைத்து  முறைப்படி வெளியிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Published by:Vaijayanthi S
First published: