• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு உத்தரவு

புதுச்சேரியில் இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு உத்தரவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

  • Share this:
    புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு  நாட்கள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நவம்பர் 8 மற்றும்  நவம்பர் 9- தேதி விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கிருஷ்ணா நகர்,எழில் நகர்,ரெயின்போ நகர்,கருவடிகுப்பம், சோலை நகர்,பாவாணர் நகர் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பாய்கிறது.

     

    காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக 8 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.ஏற்கனவே சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும்.படகு,வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அம்மாநில மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: