• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • செல்லிப்பட்டு படுகையில் உடைப்பு.. விவசாயிகள் கவலை

செல்லிப்பட்டு படுகையில் உடைப்பு.. விவசாயிகள் கவலை

புதுச்சேரியில் பிரெஞ்சு காலத்து செல்லிப்பட்டு படுகையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  • Share this:
புதுச்சேரியின் பெய்த கனமழை மற்றும் தமிழகத்தின் வீடூர் மற்றும் சாத்தனூர் அணைகள் திறக்கப்ட்டதால் சங்கராபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு நூற்றாண்டு பழமையான படுகை அணை இடியும் தருவாயில் இருந்ததை நியூஸ்18 தமிழ்நாடு, கடந்த வாரம் சுட்டிகாட்டியது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு செல்லிப்பட்டு-பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட படுகை அணையில் உடைப்பு ஏற்பட்டது.

உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016-ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. அவ்வப்போது மழைக் காலங்களில் பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரி செய்யப்படும்.கடந்த டிசம்பரில் செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீர் அழகாக வழிந்தோடி சுற்றுலா தலமாகவும் மாறியது.

ஆனால் தற்போதைய வெள்ள பெருக்கை தாங்க முடியாமல் ஏற்கனவே பழுதடைந்த பகுதி உடைந்தது. இதனால் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி கடலுக்கு செல்கிறது. படுகை அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழமைமிக்க பாலத்தை பாதுகாக்க முயற்சிகளை எடுப்பதாக அரசு கூறியிருந்தது. அதே வேளையில் புதிதாக
மாற்று படுகை அணை கட்டப்படும்  என அரசு உறுதி அளித்திருக்கிறது. அதற்குள் படுகை அணையில் நீர் தேக்கம் செய்ய முடியாமல் கடலுக்கு போவது உறுதியே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: