Home /News /national /

புதுச்சேரியில் ஜூன் 23 ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் நவச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் ஜூன் 23 ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் நவச்சிவாயம் அறிவிப்பு

பள்ளி திறப்பு

பள்ளி திறப்பு

வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் புதுச்சேரியில்ஜூன் 23 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். காமராஜர் கல்வித்துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டார். இந்த நாட்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நவச்சிவாயம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கடந்த 5ம்தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி 2022-23ம் கல்வியாண்டுக்கு புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு 23ம்தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என குறிப்பிட்ட அவர், அன்று முதல் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அன்றைய தினமே பாடபுத்தகங்கள், சீருடை வழங்கப்படும். 11ம் வகுப்பு தொடங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். புதிதாக 70 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் நமச்சிவாயம், நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்காது. பள்ளிகள் திறப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்வி கொள்கையை அமுல்டுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.புதுச்சேரியில் முழுமையும் CBSE திட்டத்தை அமல்படுத்துவது அரசு ஆலோசித்து வருகிறது.CBSEன் கீழ் சென்றால் தமிழக பாட திட்டத்தை பின்பற்ற தேவை இருக்காது என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கத்தோலிக்க கார்டினலாக, முதன்முறையாக தலித் பாதிரியார் தேர்வு... யார் இந்த அந்தோனி பூலா?


    மேலும், கடந்த ஆட்சியை விட சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது. முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் சட்ட ஒழுங்கு குறித்து பொது விவாதம் நடத்தவும் தயாராக உள்ளோம். காவல் துறையில் அண்மையில் 390 காவலர்களை நியமித்துள்ளோம். நவீன வசதிகள் கொண்ட வாகனங்கள் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.  600 ஊர்க் கால்நடை வீரர்கள், 200 காவலர்கள் என புதிதாக ஆயிரம் காவலர் பணியிடங்களை 6 மாதங்களை  நிரப்ப உள்ளோம் என்றும் கூறினார்.



    புதுச்சேரியில் கொரோனாவால் 17 குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.10 லட்சம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து ரூ.5 லட்சம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே ரூ.2 ஆயிரம் நிதி உதவி அளித்து வருகிறது. மாநில அரசு சார்பிலும் ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Puducherry, School

    அடுத்த செய்தி