ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரியில் மே 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் மே 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி

புதுச்சேரி

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மே 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மே 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா தொற்று சமீப நாட்களாக வேகமெடுக்க தொடங்கியது. கடந்த மார்ச் 16ம் தேதி புதுவையில் 24 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் மார்ச் 17ம் தேதி 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் நேற்று அதிரடியாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சமீப நாட்களில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு சுகாதாரத்துறை நேற்று பரிந்துரைத்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 22ம் தேதி (திங்கட்கிழமை) முதல் மே 31ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக புதுவை பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரா கவுட் அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநிலக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டாலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை விடுக்கப்படவில்லை. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Pondicherry, School Holiday