• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம்.. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும்; ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம்.. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும்; ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம்.. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும்; ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம்.. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும்; ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் மக்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களுக்குள் பேசி வருகின்றனர். அதில் நான் தலையிட முடியாது. ஆலோசனை மட்டுமே வழங்கலாம் என தமிழிசை கூறியுள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆரம்பகட்டத்தில் முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்போது 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை புதுச்சேரியில் 2வது தவணை உட்பட ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் அனைவரும் தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி திருவிழா 100க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்டது. 2 முறையும் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா அறிவிக்கப்பட்ட நாட்களை விட அதிகமாக நடத்தப்பட்டது. தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமங்களை அறிவித்து பரிசுகள் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்களிடையே தடுப்பூசி ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 3வது முறையாக கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இன்று தொடங்கி 12ம் தேதி வரை திருவிழா நடத்தப்படுகிறது. புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் தடுப்பூசி திருவிழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரி மக்கள் தயக்கம் நீங்கி அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். இது வரவேற்புக்குரியது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய அரசுக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும்  பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசி போட்டவர்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்.

Also read: புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு முதல்முறையாக கொரோனா தடுப்பூசி முகாம்!

கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய குழந்தைகள் நலனுக்காக தடுப்பூசி செலுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளேன். எந்த நேரத்திலும் பள்ளிகள் திறக்கப்படலாம். நல்ல சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதற்கு முன்னதாகவே தயாராக வேண்டும். கொரோனா தொற்று நீங்கியவுடன் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். புதிய தொழில் தொடங்க முன்வருமாறு தொழிற்சாலை அதிபர்களையும் வல்லுனர்களையும் அழைத்து நானும், முதலமைச்சரும் பேசியுள்ளோம்.

புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து விமானம் தள விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கித் தரவேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி பெறும். தெலுங்கானாவில் மலைவாழ் மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. நான் ஏற்கனவே ஒரு தடுப்பூசியைப் புதுச்சேரியில் செலுத்தி உள்ளேன். மற்றொரு தடுப்பூசியை தெலுங்கானா மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் இடத்திற்கு சென்று செலுத்த இருக்கிறேன்.

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் மக்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களுக்குள் பேசி வருகின்றனர். அதில் நான் தலையிட முடியாது. ஆலோசனை மட்டுமே வழங்கலாம் என  தமிழிசை கூறினார்.

முன்னதாக சின்ன வீராம்பட்டினம் வந்த   தமிழிசையை தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் வரவேற்றார் விழாவில் அரசு செயலாளர் அருண்குமார் சுகாதாரத்துறை இயக்குனர்  மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: