புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு

Youtube Video

புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் உயர்நிலைக்கூட்டம் இன்று இரவு ராஜ்நிவாஸில் நடந்தது. இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

  இந்த கூட்டத்தின் முடிவில், புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த உத்தரவு வரும் வெள்ளி முதல் அமலாகும். இதர நாட்களில் கடைகள், அங்காடிகள் பகல் 2 வரை மட்டுமே இயங்கும். இது வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். பகல் 2 மணிக்குப் பிறகு ஹோட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

  வழிபாட்டு தலங்களில் ஊர்வலம், தேரோட்டம் முதலியவை தடை செய்யப்படுகிறது. கொரோனா வழிமுறைகளோடு வழிபாடு அனுமதிக்கப்படும்.  மருத்துவமனைகள், பிற மருத்துவப் பணிகளுக்கு தேவையான ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள். கபசுர குடிநீர் வழங்குவது உட்பட இந்திய மருத்துவ வழிமுறைகள் ஊக்கப்படுத்தப்படும். ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம். கரோனா தொற்றாளர்களை அழைத்து செல்ல தனியார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: