Home /News /national /

Puducherry Assembly Election Result 2021 | புதுச்சேரியில் தோல்வியடைந்த அண்ணன்-தம்பி.. வெற்றி மாலை சூடிய மாமனார்-மருமகன்...

Puducherry Assembly Election Result 2021 | புதுச்சேரியில் தோல்வியடைந்த அண்ணன்-தம்பி.. வெற்றி மாலை சூடிய மாமனார்-மருமகன்...

நமசிவாயம்

நமசிவாயம்

புதுச்சேரியில் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தந்தை-மகன், அண்ணன்-தம்பி, மாமனார்-மருமகன் என ஒரே குடும்பத்தில் போட்டிகள் நிலவியது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி உப்பளம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ அன்பழகன். பக்கத்து தொகுதியான முதலியார்பேட்டை தொகுதியின் எம்எல்ஏ பாஸ்கர் இவர் அன்பழகனின் தம்பி ஆவார். கடந்த 4 முறையாக அன்பழகனும் கடந்த இரு முறையாக பாஸ்கரும் வெற்றி பெற்று வந்தனர். இந்த தேர்தலில் இவர்கள் இருவரும் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி கண்டுள்ளது.

இதே போல் புதுச்சேரியில் மாமனார்-மருமகன் வெற்றி பெற்றுள்ளனர். தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதி என 2 இடங்களில் போட்டியிட்ட என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி ஏனாமில் தோல்வியும் தட்டாஞ்சாவடியில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இவரது மருமகனான முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து மண்ணாடிப்பட்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கட்சிகள் வேறாக இருந்தாலும் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ளனர்.

இதே போல பாஜக சார்பில் போட்டியிட்டத் தந்தை, மகனுக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதில் காமராஜர் நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.  அவரின் மகன் விவியன் ரிச்சர்ட்ஸ் நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...  Puducherry Assembly Election Result 2021 | புதுச்சேரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் என்.ஆர்.காங்கிரஸின் ஏகேடி. ஆறுமுகம்...



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Puducherry, Puducherry Assembly Election 2021

அடுத்த செய்தி