ஒவ்வொரு மொழிக்கும் தனிச்சிறப்பு இருக்கையில் ஒரே மொழி என்பது ஏற்புடையதல்ல - ஜக்கி வாசுதேவ்

news18
Updated: September 15, 2019, 11:41 AM IST
ஒவ்வொரு மொழிக்கும் தனிச்சிறப்பு இருக்கையில் ஒரே மொழி என்பது ஏற்புடையதல்ல - ஜக்கி வாசுதேவ்
புதுச்சேரியில் கிரண் பேடியுடன் ஜக்கி வாசுதேவ்
news18
Updated: September 15, 2019, 11:41 AM IST
காவேரி கூக்குரல் என்ற பேரணியை நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், “ஒவ்வொரு மொழிக்கு தனி சிறப்பு உள்ளது. அதனால் ஒரே மொழி என்பது ஏற்புடையதல்ல” என்றார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காவிரியை புத்துயிர் ஊட்டும் வகையில் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு செப்டம்பர் மூன்றாம் தேதி தனது இருசக்கர பேரணியை துவக்கினார்.
தலைக் காவிரியில் துவங்கிய பயணமானது ஓசூர் தர்மபுரி மேட்டூர் தஞ்சாவூர் வழியாக இன்று காலை புதுச்சேரி ராஜ்நிவாஸ் வாசல் வந்தடைந்தது.


ராஜ் நிவாசிற்கு வந்த இருசக்கர பேரணியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரவேற்றார். பின்னர் கொடி அசைத்து பேரணியை துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவிடம் ஒரே மொழி குறித்து கேட்டதற்கு, மொழிவாரியாக இந்தியா ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது.இங்கு அனைத்து மொழிகளும் முக்கியம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழிக்கு தனி சிறப்பு உள்ளது. அதனால் ஒரே மொழி என்பது ஏற்புடையதல்ல” என்று கூறினார்.

First published: September 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...