ஒரு ஆக்சிஜன் படுக்கை வாங்க ரூ.12,000 தேவைப்படுகிறது... பொதுமக்கள் நிதியளிக்கலாம்.. தமிழிசை வேண்டுகோள்..

ஒரு ஆக்சிஜன் படுக்கை வாங்க 12,000 ரூ தேவைப்படுகிறது. சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியளிக்கலாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு ஆக்சிஜன் படுக்கை வாங்க 12,000 ரூ தேவைப்படுகிறது. சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியளிக்கலாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மூலம் ஆயுஸ் கவாத் என்னும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பொட்டலங்கள் 10,000 காவல்துறைக்கு வழங்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கலந்துகொண்டு வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, புதுச்சேரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுத்தும் அதிகரித்து வருகிறது. இதில் தற்போது இளைஞர்களின் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவில்லை எனில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை தடுக்க முடியாது என்றார்.

மேலும் நோய் தடுப்பு முறைகளை அதிகப்படுத்தி வருவதாகவும் ஒரு வாரத்திற்குள் நெட்டப்பாக்கம் பகுதியில் இயற்கை முறையில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் கூறியவர் ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனை மற்றும் ஏனாம் பகுதியில் உற்பத்தி மையம் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க... சகோதரரின் மரணம் ஏற்படுத்திய தாக்கம்... ஏழைகளின் உயிர்காக்கும் விஏஓ ஆம்புலன்ஸ்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 70 ஆக்சிசன் செறிவூட்டல் மற்றும் புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு 40 ஆக்சிசன் செறிவூட்டல் இயந்திரம் மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார். ஒரு ஆக்சிஜன் படுக்கை வாங்க 12,000 ரூபாய் தேவைப்படுகிறது. சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியளிக்கலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: