Home /News /national /

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு...!

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Corona death: கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,913 அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை. ஒரேநாளில் 1911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 1410 நபர்களுக்கும், காரைக்காலில் 331 பேர், ஏனாமில் 151 பேரும், மாஹேவில் 19 பேர் என மொத்தம் 1911 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தற்போது 16,394 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,913 அதிகரித்துள்ளது.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,36,948 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,55,254 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Also read... இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,18,381 பேரும், இரண்டாம் தவணை 6,00,734 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 5,721 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 15,24,836 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona death, Pondicherry

அடுத்த செய்தி