மத்திய அரசு முறையாக இடஒதுக்கீடு வழங்குவதில்லை - புதுச்சேரி அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு

புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு முறையாக இடஒதுக்கீடு வழங்குவதில்லை - புதுச்சேரி அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அரசு கொறடா அனந்தராமன்.
  • Share this:
புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

அரசு கொறடா அனந்தராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசுக்கு வழங்கக் கூடிய ஒதுக்கீட்டு இடங்களில் எந்தவொரு இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, புதுச்சேரி மாநில மாணவர் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் முதலமைச்சர் நாராயணாசாமி அறிவுறுத்தலின்பேரில், அரசு கொறடா என்ற முறையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்துள்ளேன் என்றார்.


Also see:

மத்திய அரசுக்கு இளநிலை மருத்துவப் படிப்பில் 15 சதவிகித இடஒதுக்கீடும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவிகித ஒதுக்கீடும் வழங்குகிறோம். இந்த இடங்களையும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 100 சதவிகித இடங்களையும் மத்திய அரசு நிரப்புகிறது. ஆனால், அந்த இடங்களை நிரப்பும்போது இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. எனவே, இதில் புதுச்சேரி அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.தமிழக அரசும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி இன்றைய தினம் 2 வழக்குகளையும் வருகிற திங்கள்கிழமை எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதில் நல்ல தீர்ப்பு வரும் என எண்ணுகிறோம். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என அனந்தராமன் கூறினார்.
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading