புதுச்சேரியில் மீண்டும் பழைய இடத்திலேயே காய்கறி அங்காடி

கொரோனா காரணமாக மூடப்பட்ட காய்கறி அங்காடி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

புதுச்சேரியில் மீண்டும் பழைய இடத்திலேயே காய்கறி அங்காடி
புதுச்சேரியில் மீண்டும் திறக்கப்பட்ட காய்கறி அங்காடி
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக புதுச்சேரி நேரு வீதியில் இயங்கி வந்த பெரிய மார்க்கெட் என்கிற குபேர் மார்க்கெட் மார்ச் 31-ம் தேதி முதல் தற்காலிகமாக புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்தது.

5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசு ஏற்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்ததை அடுத்து இன்று முதல் காய்கறி சந்தை பெரிய மார்க்கெட்டில் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதன்படி இன்று காலை முதல் மீண்டும் பெரிய மார்க்கெட் பகுதியிலேயே காய்கறி சந்தை இயங்க தொடங்கியது. பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.


பேருந்து நிலையத்திலேயே மீண்டும் திறக்கப்பட்ட காய்கறி அங்காடி


மேலும் நடைபாதையில் கடைகள் வைக்கக்கூடாது,  முக கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்க கூடாது என்பது போன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதே வேளையில் தற்காலிக மார்க்கெட் காலியானதால் நேற்று வரை வெளியிலில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் போக்குவரத்து நிலையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதனால் முழுமையான செயல்பாட்டிற்கு பேருந்து நிலையமும் வந்துள்ளது. ஆனால் பயணிகளின் வருகைதான் குறைவாக இருக்கிறது.மேலும் படிக்க...

கடலில் 3 மாதங்களாக சிக்கித்தவிக்கும் தமிழர்கள் உள்பட 48 இந்தியர்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading