சர்வதேச நகரமான ஆரோவிலுக்கு விரைவில் தலைவர் நியமனம்: மத்திய அரசு தகவல்!

ஆரோவில்

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக பெரும்பாலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட முடியாத நிலை உள்ளது. குறைவான செலவே ஆகுமென்றும்  ஆரோவில் பவுண்டேஷன் தெரிவித்த காரணத்தால் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவிலுக்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார் என மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று புதுச்சேரியை யொட்டியுள்ள சர்வதேச நகரம் என அழைக்கப்படும்  ஆரோவில் குறித்து  ரவிக்குமார் எம்.பி கேள்வி எழுப்பினார். 2020-21, 2021-22 பட்ஜெட்டில் ஆரோவில் பவுண்டேஷனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? ஒதுக்கீடு குறைக்கப்பட்டதன் காரணம் என்ன? ஆரோவில் பவுண்டேஷனை வலுப்படுத்துவதற்கு  அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா? ஆரோவில் பவுண்டேஷனுக்குத் தலைவரை நியமிப்பதில் தாமதம் ஏன்?  ஆகிய கேள்விகளை அவர் எழுப்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்குக் மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான்  எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘ஆரோவில் பவுண்டேஷனுக்கு 2020 -21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18.20 கோடி ஆகும். 2021-  22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18.20 கோடி ஆகும். கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக பெரும்பாலான திட்டங்கள் அங்கே நடைமுறைப்படுத்தப்பட முடியாத நிலை உள்ளது’ என்றும், எனவே மூலதன செலவு என்னும் தலைப்பின் ( capital head)  கீழ் செலவு இல்லை என்றும்,  பொது தலைப்பின் கீழ் ( general head) குறைவான செலவே ஆகுமென்றும்  ஆரோவில் பவுண்டேஷன் தெரிவித்த காரணத்தால் 2020-21 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ( Revised Estimate ) ஆரோவில் பவுண்டேஷனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 4.58 கோடியாகக் குறைக்கப்பட்டது என்றும் விளக்கமளித்தார்.

மேலும் படிக்க: ஸ்டெர்லைட்: ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மேலும், ஆரோவில் பவுண்டேஷனுடைய வளர்ச்சிக்காகக் கல்வி அமைச்சகம் வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும், நிதி உதவியையும்,   தொடரும் செலவினங்கள், தொடரா செலவினங்களுக்காக நிதி நல்கைகளையும் வழங்கிவருகிறது.  ஆரோவில் பவுண்டேஷன் ஈட்டும் வருமானம் மற்றும் அமைச்சகம் அளிக்கும் நிதி ஆகியவற்றைக் கொண்டு ஆரோவில் பவுண்டேஷனுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான செலவுகள் செய்யப்படுகின்றன.

 இதையும் படிங்க: திமுக ஐ.டி.விங்கில் மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு?


ஆரோவில் பவுண்டேஷனுக்கு முழுநேர செயலாளரை அண்மையில் கல்வி அமைச்சகம் நியமித்தது. நிர்வாகக் குழுவின் ( governing board)  தலைவரை நியமனம் செய்வதற்குத் தகுதியானவரைத் தெரிவுசெய்யும் பணி தற்போது நடந்து வருகிறது ’என அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
Published by:Murugesh M
First published: