Puducherry CM Rangasamy | புதிதாக 10000 பேருக்கு முதியோர் பென்ஷன் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டார் ரங்கசாமி..

முதல் கையெழுத்து போட்ட ரங்கசாமி

முதலமைச்சராக பதவி ஏற்ற ரங்கசாமி தனது முதல் கையெழுத்தாக முதியோர்களுக்கான பென்ஷன் திட்டத்தில் 10000 பேருக்குரிய கோப்பில் போட்டார்.

  • Share this:
புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 20வது முதலமைச்சராக பதவி ஏற்றார் ரங்கசாமி. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ரங்கசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்ற பின்னர் சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி தனது அறையில் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக 10000 பேருக்கு புதியதாக முதியோர், விதவைகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார். புதுச்சேரியில் ரூ. 2000, ரூ.2500, ரூ.3000 என முதியோர், விதவை பென்ஷன் வழங்கப்படுகிறது.

அடுத்ததாக ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தில் நிலுவையில் உள்ள 2 மாதத்திற்கான அரிசி வழங்கும் கோப்பில் ரங்கசாமி கையெழுத்திட்டார். மூன்றாவதாக உயர் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான சென்டாக் அரசின் நிதி வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

மேலும் படிக்க... தேனியில் ஊரடங்கால் பாதிப்படைந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி உதவும் மருந்தாளுனர்..



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: