Puducherry Assembly election 2021 : புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது

Puducherry Assembly election 2021 : புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது

வாக்குப் பதிவு இயந்திரம்

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படாததால் பொதுமக்கள் சிரத்திற்கு உள்ளாகினர்.

  • Share this:
    புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படாததால் பொதுமக்கள் சிரத்திற்கு உள்ளாகினர்.

    புதுச்சேரி மாநிலம் ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 21 ஆவது வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதானது. இதனால், அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்த வருகின்றனர். இந்நிலையில், வைத்திக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 21 ஆவது வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தடைபட்டது.

    இதேபோல, புதுச்சேரி குண்டுப்பாளயம் பகுதியில் உள்ள 9/4a வாக்குச்சாடியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செயல்படவில்லை இதனால் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நீண்டநேரம் காத்திருக்கின்றனர்.

    Must Read :   நடிகர் ரஜினி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்

     

    புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகுட்பட்ட குண்டுபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாத நிலையில் வாக்குபதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. காலை 7 மணி முதல் 100-க்கும் மேற்பட்ட வாக்களர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: