முகப்பு /செய்தி /இந்தியா / வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்

புதுவை இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்

புதுவை இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து புதுச்சேர்யில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு புதிய விவசாயிகள் சட்டத்தை நேற்று அமல்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையிலும் இந்தச் சட்டம் நிறைவேறியது. நாடு முழுவதும் இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் போராடி வருகின்றன.

top videos

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை வகிக்க, போராட்டக்காரர்கள் நாற்றாங்காலை கையில் வைத்துக்கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், சிறு விவசாயிகளை அழிக்கும் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அவர்கள்  நாற்றாங்காலை வீதியில் நட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Farmers Protest, Puducherry