திடீரென கடலில் மூழ்கிய படகு - புதுவை மீனவருக்கு நேர்ந்த சோகம்

எதிர்பாராத விதமாக தனது படகு திடீரென கடலில் மூழ்கியதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புதுவை மீனவரான கருணாகரன் கூறியுள்ளார்.

திடீரென கடலில் மூழ்கிய படகு - புதுவை மீனவருக்கு நேர்ந்த சோகம்
திடீரென கடலில் மூழ்கிய படகு.
  • Share this:
புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். கடந்த இரண்டு நாட்களாக கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டதால் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் தனது படகை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

இன்று காலை அவர் துறைமுகத்துக்கு வந்து பார்த்தபொழுது, அவரது படகு கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது. செய்வதறியாது திகைத்த அவர், படகை மீட்க முடியாமல் தவித்தார். இதனைக் கண்ட மற்ற மீனவர்கள் உதவ முயன்றனர். எனினும் அந்தப் படகின் எடை அதிகமாக இருந்ததால் தூக்க முடியாமல் போகவே அது நீரில் மூழ்கும் நிலையில் கைவிட்டுள்ளனர்.

Also read: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையைத் திரும்பப்பெறக் கோரி மாணவர்கள் கடிதம்


கடல்நீர் உட்புகுந்ததால் படகின் இயந்திரங்கள் முழுமையாகப் பழுதடைந்து இருப்பதாகவும் இதனால் ஒட்டுமொத்தமாக 20 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறும் கருணாகரன், இது குறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading