புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அரசு அறிவிப்பு
புதுவை முதல்வர் நாராயணசாமி.
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 4:37 PM IST
  • Share this:
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடந்தது. இக்கூட்டத்தில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச்செயலர் அஸ்வினி குமார், கல்வித்துறை செயலர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலரும் ஆட்சியருமான அருண் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்ட முடிவில் மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரி, காரைக்காலில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புதுச்சேரி, காரைக்காலில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் ஏற்பட்டால் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்து தீர்வு காணலாம். அதேபோல், 9, 11 ம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 12 முதல் பள்ளி செல்லலாம். மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியையும், மதிய உணவையும் கல்வித்துறை ஏற்பாடு செய்யலாம். ஆனால் கட்டுபடுத்தபட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை.

Also read: மாட்டுச்சாணம் முதல் நீராவி வரை: கொரோனாவை குணப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வினோதமான பொய் மருத்துவ முறைகள்


கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். போதிய சமூக இடைவெளியையும் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டும். தினமும் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும், அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading