ஓய்வு பெற்று திரும்பிய ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

பணி முடித்து திரும்பிய ராணுவ வீரருக்கு புதுவையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓய்வு பெற்று திரும்பிய ராணுவ வீரருக்கு சொந்த ஊரில்  உற்சாக வரவேற்பு
பணி முடித்து திரும்பிய ராணுவ வீரருக்கு புதுவையில் அமோக வரவேற்பு
  • Share this:
புதுச்சேரி  கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் 1999ம் ஆண்டு இந்திய ராணுவப் பணியில் சேர்ந்தார். கார்கில் போர், ஜம்மு காஷ்மீர் எல்லை, பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் இவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் 21 ஆண்டு காலம் ராணுவப் பணி முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பினார் சசிகுமார். அவரை ஊர் எல்லைப் பகுதியில் இருந்து பொதுமக்கள் மேளதாளத்துடன் நடனமாடி வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Also read: பேரறிவாளன் உடல்நிலை மோசமடைந்தால்தான் பரோல் வழங்கப்படுமா? நீதிமன்றம் அதிருப்தி


அப்போது தேசிய கொடியுடன் காரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றதோடு, வழிநெடுகிலும் அவருக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை போர்த்தியும் அமோக வரவேற்பு அளித்தனர். மேலும் பட்டாசு வெடித்து வாழ்த்து கோஷங்களையும் அங்கிருந்தவர்கள் முழங்கினர். இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading