புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா சிறுவனிடம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்துக்கொண்டே அய்ய்யோ என்னடா லைன் கட்டி நிக்கிறீங்க என்று சிரிப்போடு முடிகின்றது வீடியோ.
புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க - மக்களே அலெர்ட்.. 4 நாள்கள் தொடர் விடுமுறை.. 1000 சிறப்பு பேருந்துகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு
ஏற்கனவே இவர் விழிப்புணர்வு குறும்படத்திலும் நடித்துள்ளார். முன்னதாக இவர் தனது உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலானது. தொடர்ந்து மகளிர் தினத்தில் அம்மன் வேடமிட்ட வீடியோ வைரலாகியது.
இந்நிலையில் தற்பொழுதும் அவர் வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் நான்தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க - சித்திரைப் பெருவிழா 5ம் நாள் வீதி உலா - தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சியும் சொக்கரும்!
அதில் அவர் சிறுவனிடம் அமைச்சர் என்று கூப்பிட்டு யார் வருகிறார்கள் என்று கூறி ஒளிந்து கொள்வதும் , அமைச்சர் என்று கூறியவுடன் வந்து கை தட்டி உற்சாகப்படுவதும் தொடர்ந்து சிறுவனுக்கு சாக்லேட் கொடுப்பதும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து முடியும் போது அய்ய்யோ என்னடா லைன் கட்டி நிக்கிறீங்க என்று சிரிப்பதுமாக முடியும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.