Home /News /national /

புதுவை உள்ளாட்சி தேர்தல் பாஜக தனித்து போட்டியிடும் - மாநில தலைவர் சாமிநாதன்

புதுவை உள்ளாட்சி தேர்தல் பாஜக தனித்து போட்டியிடும் - மாநில தலைவர் சாமிநாதன்

Puducherry BJP | புதுச்சேரிஉள்ளாட்சி தேர்தல் பாஜக தனித்து போட்டியிடும் என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்

Puducherry BJP | புதுச்சேரிஉள்ளாட்சி தேர்தல் பாஜக தனித்து போட்டியிடும் என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்

Puducherry BJP | புதுச்சேரிஉள்ளாட்சி தேர்தல் பாஜக தனித்து போட்டியிடும் என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட  தொடங்கியுள்ளது.

பாஜக மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவி  வழங்காததால் ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம். இதுதொடர்பாக தங்களின் அதிருப்தியை கட்சி மேலிட பொறுப்பாளரிடம் எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற உள்ள  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அதிமுகவோடு  கூட்டணியில் இருந்தாலும்  பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

அதேபோல புதுச்சேரியிலும் பாஜகவின் பலத்தை  வெளிப்படுத்தும் வகையில் தனித்து போட்டியிட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள்  கூட்டத்தில், தனித்து போட்டியிட தயாராகும்படி பாஜகவினருக்கு மேலிட தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள வார்டுகளில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யும்படியும் மாநில நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க - ''ஆம் ஆத்மி வளர்ச்சியை பார்த்து பாஜக பயந்துவிட்டது'' - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தாக்கு

 
இது குறித்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன் அளித்த பேட்டியில், ''புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷி,மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களூம் நிர்வாகிகளும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனால் உள்ளாட்சி தேர்தல் பாஜக தனித்து போட்டியிடும்.

 

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினரும் நிர்வாகிகளும் தங்களது கருத்துக்களை கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளனர். தற்போது புதுச்சேரியில்பாஜகவுக்கு 12 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிரதமர் மோடி தலைமையில்    ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடக்கிறது. இதனால்தான்   4 மாநிலங்களில்  மாபெரும் வெற்றியை பாஜக பெற்றுள்ளது. நாடு முழுவதும் பாஜக ஆட்சி அமைவது தான் எங்கள் இலக்கு. இதில்  புதுச்சேரியும் அடங்கும்.

புதுச்சேரிஉள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கூட்டணிக்கு  சம்பந்தமில்லை. உள்ளூர் தலைவர்கள் வருவதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இதனால் இரு தினங்களுக்கு முன்பு நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உள்ளூர்  தலைவர்களும்  பாஜக எம்எல்ஏக்களும்  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனை தேசிய தலைமை கண்டிப்பாக பரிசீலிக்கும். எங்களைப் பொறுத்தவரை பாஜக தனித்து நின்று தேர்தலை சந்தித்து உள்ளூர் தலைவர்களை உருவாக்கும்.

அடிமட்ட அளவில் தொண்டர்களும் தலைவர்களும் பாஜகவிற்கு  கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இதனால் அதிக இடங்களில் நிற்க தயாராகி உள்ளது.  புதுச்சேரியில்தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்.'' என்று சாமிநாதன் தெரிவித்தார்.
Published by:Musthak
First published:

Tags: BJP, Pondicherry

அடுத்த செய்தி