• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி: 8 கோடி ரூபாயில் ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் - செலவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்..

புதுச்சேரி: 8 கோடி ரூபாயில் ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் - செலவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்..

ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் (கோப்புப்படம்)

ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் (கோப்புப்படம்)

8 கோடி ரூபாயில் ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்திருப்பதாகவும் அதற்கு செய்யப்பட்ட செலவுகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

  • Share this:
புதுச்சேரியின் புகழ்மிக்க வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு 2018ம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. 8 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (RTI) வழியாக பெறப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ரகுபதி என்பவர் கூறியுள்ளார்.

கோயிலுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததில் எந்த விதிமுறையும் பின்பற்றவில்லை என்றும் அவ்வாறு நியமிக்கப்பட்ட ராஜசேகர் கும்பாபிஷேகத்தையொட்டி விழாக்குழுவை அமைக்காமல் அவரே செலவுகளைச் செய்துள்ளதாகவும் RTI மூலம் தகவல்களைப் பெற்ற ரகுபதி தெரிவித்துள்ளார்.

Also read: தானியங்கி டெபாசிட் இயந்திரம் இருக்கும்போது ஏன் பணம் எடுக்க ATM வரிசையில் நிற்கவேண்டும்? - SBI

அவர் மேலும் கூறுகையில், வேத விற்பன்னர்களுக்கு 28 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு மின் செலவு என 80 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டு தனியார் வாடகை நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் உட்பட எந்தப் பணிக்கும் டெண்டர் கோராமல் நியமன அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான எந்தக் கேள்விக்கும் கோயில் நிர்வாகம் பதில் தரவில்லை என்றார்.



இது குறித்து அரசுக்கும் உள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், இதனால் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கவனத்திற்குக் கொண்டு சொல்லப்பட்டு, புதுச்சேரி அரசை விசாரிக்க மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: