புதுவையில் சூறைக்காற்றுக்கு 50 ஏக்கர் வாழை மரங்கள் நாசம்

புதுவையில் சூறைக்காற்றுக்கு 50 ஏக்கர் வாழை மரங்கள் நாசமாகியுள்ளன.

புதுவையில் சூறைக்காற்றுக்கு 50 ஏக்கர் வாழை மரங்கள் நாசம்
சூறைக்காற்றுக்கு 50 ஏக்கர் வாழை மரங்கள் நாசம்
  • Share this:
புதுச்சேரியில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் கூனிச்சம்பட்டு, திருக்கனூர், செட்டிப்பட்டு, சந்தைப் புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமாகின.

இதற்கு முன்னர் மரவள்ளி, வெண்டை, கத்திரிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டபோது காட்டுப் பன்றிகள் தொல்லை தந்ததால் வாழை பயிரிடுவதற்கு 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் முடிவெடுத்தனர். கடந்த ஓராண்டாக இயற்கை விவசாய முறையில் இந்த வாழை மரங்களை உற்பத்தி செய்து வந்தனர்.கொரோனா காலத்தையும் பொருட்படுத்தாமல் இயற்கை முறைக்கு கூடுதல் செலவானாலும் மக்களுக்கு தரமான, ஆரோக்கியமான வாழைப் பொருட்களைத் தர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்ட பெண் விவசாயி சகுந்தலா, தற்போது அவை முறிந்து விழுந்து கடுமையான நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக கண்ணீருடன் கூறுகிறார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading