• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 2 வழக்குகள் மட்டுமே பதிவு? - விளக்கம் கோரும் ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 2 வழக்குகள் மட்டுமே பதிவு? - விளக்கம் கோரும் ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 2 வழக்குகள் மட்டுமே பதிவு என குற்றச்சாட்டு

புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 2 வழக்குகள் மட்டுமே பதிவு என குற்றச்சாட்டு

கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 116 புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன எனதும், அதில் 3 புகார்கள் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் கூறுவதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு தொடர்பாக புதுச்சேரி அரசு விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடு குறித்து ஆர்டிஐ மூலம் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல்களைப் பெற்றுள்ளார்.

இதனடிப்படையில், கடந்த 6 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு சம்பந்தமாக பெறப்பட்ட புகார்கள் எத்தனை, இவற்றில் எத்தனை புகார்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பன குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றார்.

அதில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 116 புகார்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன எனதும், அதில் 3 புகார்கள் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், ஒருவருக்குக்கூட தண்டனை வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

22 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இந்தத் துறை செயல்பட்டு வருவதாகவும், ஆண்டுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமாக வாடகை செலுத்தப்பட்டு வருவதாகவும் ஆய்வாளர், காவலர்கள் என 13 பேர் பணியாற்றி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறும் சமூக ஆர்வலர் ரகுபதி, மொத்த புகார்களில் 2% மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், மக்கள் லஞ்ச ஒழிப்புத் துறையின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் தெரிவித்தார்.



புதுச்சேரியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகக் கூறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், சின்னச் சின்ன புகார்களுக்குக்கூட சிபிஐ அலுவலகத்தை நாடுவதாகவும், லஞ்ச ஒழிப்பு வாரத்தைக் கடைபிடிக்க புதுச்சேரி அரசுக்கு தகுதி கிடையாது எனவும் குற்றம்சாட்டுகிறார்.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லஞ்ச ஒழிப்புதுறை பொதுமக்களிடம் துறைவாரியாக பெறப்பட்ட குறைகளில் தீர்வு காணப்பட்டதையும், நிலுவைகளையும் தெரிவிக்க வேண்டும். அதன் விவரங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு, சம்பந்தப்பட்ட புகார்தாரர்களிடமும் தெரியப்படுத்த வேண்டும். புகார்களுக்குத் தீர்வு காண முகாம்கள் நடத்த வேண்டும். இதன் மூலம் மக்கள் எளிதாக அதிகாரிகளை அணுகி குறைகளைத் தெரிவிக்கவும் தீர்வு காணவும் முடியும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: