புதுச்சேரி: கொரோனா தொற்று பாதித்தவர் வெளியே சுற்றினால் ரூ.1000 அபராதம்..

அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு தொற்று அறிகுறி இருந்தாலும் உடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: கொரோனா தொற்று பாதித்தவர் வெளியே சுற்றினால் ரூ.1000 அபராதம்..
கொரோனா விதிமுறைகள் மீறினால் அபராதம்
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 6:59 AM IST
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது நோய் தொற்று உள்ளோர் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களோடு தொடர்பில் இருந்தோர், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   தற்போது மருத்துவமனையில் இருப்போரை விட வீடுகளில் அதிகளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.வீட்டுத்தனிமையில் இருந்து மருத்துவம் பெறுவோர், தனிமைப்படுத்தப்பட்டோர் பலர் கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றுகிறார்கள்.

இதனால் நோய் தொற்று பரவல் அதிகமாகிறது.இதனால் நோய் தொற்று விதிமுறையின்படி தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக புதுச்சேரி ஆட்சியரும், சுகாதாரத்துறை செயலருமான அருண் இன்று வெளியிட்ட உத்தரவில், தனிமைப்படுத்தப்பட்ட நபர்  (Quarantine) விதிமீறினால் ரூ 500 வசூலிக்கப்படும்.கொரோனா தொற்று உறுதியாகி தனிமையில் சிகிச்சை பெறுவோர் (isolation) விதிமீறினால் ரூ. ஆயிரம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.மேலும் அவர்,புதுச்சேரியில் 70 சதவீத கொரோனா இறப்புகள் தாமதமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருவதால்தான் நிகழ்ந்துள்ளது. அதனால் காய்ச்சல், தொடர் இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம்  உள்பட கொரோனா அறிகுறிகளுடன் யாரேனும் நர்சிங் ஹோம், தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வந்தால் உடன் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சுகாதாரப்பணியாளர் வீடுதோறும் சென்று தொற்று அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய உள்ளனர்.


அதேபோல் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு தொற்று அறிகுறி இருந்தாலும் உடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக என்றும் தெரிவித்துள்ளார்.
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading