புதுச்சேரியில் தொழில் துவங்க வாருங்கள் என்று முதலீட்டாளர்களுக்கு துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் சென்னை கிளை சார்பில் ”புதுச்சேரி வளர்ச்சியின் மீட்டுருவாக்கம் – வாய்ப்புகள், உத்திகள், தீர்வுகள்” என்ற மாநாட்டினை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையில் இன்று தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பிரெஞ்சு துணைத்தூதர் லிசே தால்போட் பர்ரே, தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் தமிழிசை பேசுகையில், ''கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஒட்டுமொத்தமான உலகமும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. புதுச்சேரியிலும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி ஏற்கனவே வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்குத் தேவையான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். முதலமைச்சரும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அதற்காக முயற்சி எடுக்கிறார்கள்'' என்றார்.
இதையும் படிங்க - பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடாதீர்கள் - டிவி சேனல்களுக்கு அரசு அறிவுறுத்தல்
சுற்றுலா, வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் இருக்கிறது. புதுச்சேரியில் உள்ளவர்கள் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்த தமிழிசை, புதுச்சேரியில் உள்ள இயற்கை வளமும் புதுச்சேரி அரசும் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
இதையும் படிங்க - ஆந்திராவில் எலக்ட்ரிக பைக் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து விபத்து… ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
தொழில், வணிகம், சுற்றுலா என்று எந்தத்துறையாக இருந்தாலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எந்தெந்த வகையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டுமோ அதற்கான முழு முயற்சியை இந்த அரசு மேற்கொள்ளும்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு தொழில், வணிகம், மருத்துவம் என அனைத்துத்துறைகளும் மீண்டெழுந்து வந்து கொண்டு இருக்கிறது. தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் புதுச்சேரி வந்தால் புதுச்சேரி மக்களுக்கு பயன் தருவதாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரும். புதுச்சேரி வளர்ச்சி அரசு உற்ற துணையாக இருக்கும். அரசிடமிருந்து அத்தனை ஒத்துழைப்பும் கிடைக்கும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.