புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெற்று வருகிறது .காரைக்காலின் 5 தொகுதிகளுக்கு காரைக்கால் அண்ணா கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக-அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதேவேளையில் புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்து வந்தார்.
முதல்சுற்று எண்ணப்பட்ட போது, தி.மு.க.வேட்பாளர் அனிபால் கென்னடி 750 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அ.தி.முக., வேட்பாளர் அன்பழகன் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார். பின்னர் திமுக - அதிமுக வேட்பாளர் இடையேயான வாக்கு வித்தியாசம் அதிகரித்தது.
தற்போது, திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.