புதுச்சேரியில் ஆளும் தரப்பின் பலம் என்ன? எதிர்க்கட்சி பலம் என்ன?

புதுச்சேரி சட்டமன்றம்

புதுச்சேரியில் ஆளும் தரப்பின் பலம் 12 எம்.எல்.ஏக்களாக குறைந்துள்ளது.

 • Share this:
  புதுச்சேரியில் 20 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் தி.மு.க 2 தொகுதிகளிலும் வென்றது. அதுபோல, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும், அ.தி.மு.க 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஒரு சுயேட்சையும் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றார். பா.ஜ.கவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில் 3 நியமன எம்.எல்.ஏக்கள் உள்ளன. அதன்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவையின் எம்.எல்.ஏ எண்ணிக்கை 33 ஆகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தனர்.

  இதனால், சட்டப்பேரவையில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது. நியமண எம்.எல்.ஏக்களையும் சேர்த்து எதிர்கட்சிகளின் பலமும் 14 ஆக இருந்தது. இந்தநிலையில், நேற்று இரண்டு ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் ராஜினாமா செய்தனர்.

  அதனால், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 12-ஆக குறைந்துள்ளது. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களின் பலம் 14-ஆக உள்ளது. இன்று, தற்போது இருக்கும் எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் வாக்களிக்கும்பட்சத்தில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவாய்ப்பில்லை.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: