Puducherry : புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் நாளை பதவியேற்பு

ரங்கசாமி

நாளை புதுச்சேரி ராஜ்நிவாஸில் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பும் அதையடுத்து சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பும் நடக்கிறது.

  • Share this:
புதுச்சேரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் நாளை பதவியேற்கின்றனர். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதலமைச்சராக பதவியேற்றார். மற்ற அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதையடுத்து, கடந்த 21-ம் தேதி தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ லட்சுமி நாராயணனனை முதல்வர் பரிந்துரைத்தார்.

இந்நிலையில், ராஜ்நிவாஸில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அதை தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் மற்றும் நியமன எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க... Neet Exam | தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு...



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: