Home /News /national /

11 ஆண்டுகளில் 11,000 கூண்டுகள்.. சிட்டுக்குருவிகளை காக்க பாடுபடும் புதுச்சேரியின் பட்சிகளின் ராஜன்

11 ஆண்டுகளில் 11,000 கூண்டுகள்.. சிட்டுக்குருவிகளை காக்க பாடுபடும் புதுச்சேரியின் பட்சிகளின் ராஜன்

குருவிகளின் காதலன் அருண்

குருவிகளின் காதலன் அருண்

Puducherry : புதுச்சேரியின்சிட்டுக்குருவிகளை காக்க சின்ன வீடு முதல் ஆளுநர் மாளிகை வரை 11,000 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
புதுச்சேரி குயவர்பாளையத்தை சேர்ந்த  அருண். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துமனை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இதுவரை சிட்டுக்குருவிகள் வளர்ப்புக்காக கொடுத்த கூண்டுகளின் எண்ணிக்கை 11ஆயிரத்தை தாண்டியுள்ளது.  பிரான்ஸ், லண்டன் உட்பட பல வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் குருவி கூண்டுகளை வழங்கியுள்ளார்.

சிறுவயதில்  நாள்தோறும்  குருவிகளுக்கு அரிசி, சாதம் போன்றவற்றை அளித்த அருண்,  பல ஆண்டுகளாக மோட்டுவளையுடன் கூடிய ஓட்டு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். நாள்தோறும் குருவிகளுக்கு அரிசி, சாதம் போன்றவற்றை அளித்து வருகிறார். குருவிகளின் மீதிருந்த பாசம் ஆண்டுகள் செல்ல செல்ல தனிக்காதல் மலர்ந்துவிட்டது. கடந்த 15 ஆண்டுகளில்  குருவிகளின் சத்தம் மெதுவாக குறைய தொடங்கியது. ஏன் இப்படி நடக்கிறது? என தனி ஆராய்ச்சியே செய்தார். நகர மேம்பாடு, மனிதர்களின் மன மாற்றம்தான் குருவிகளின் எண்ணிக்கையை குறைத்தது என தெரியவந்தது.

சிட்டுக்குருவி


Also Read:  அடர் வனத்தில் தீ தடுப்பு பணியில் 6 கும்கி யானைகள்

குருவிகள் மனிதர்களோடு உறவாடி பழக்கப்பட்டவை. கூட்டுக்குடும்பங்கள் வாழும் வீட்டையே குருவிகள் தேர்ந்தெடுக்கும். வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் முன்பெல்லாம் கூடு கட்டும். ஆனால் இப்போது எந்த வீடுகளிலும் சிறு இடைவெளி கூட விட்டுவைப்பது கிடையாது. வீட்டின் வெளிப்புறமும் பறவைகளுக்கு இடம் ஒதுக்குவது கிடையாது. வீட்டின் முகப்பு அழகுக்காக முழுமையாக கண்ணாடிகளை பொருத்தி விடுகின்றனர். பின்னர் எப்படி குருவிகள் வந்து கூடு கட்டும்? இந்த சிந்தனையோடுதான் குருவிகள் கூடு கட்ட கூண்டு அமைப்பது என முடிவு செய்ததாக அருண் கூறுகிறார்.

சிட்டுக்குருவி


ஒரு கூண்டு செய்ய 130 ரூபாய் செலவாகும். தன் சம்பளத்தில் பாதியை வீட்டுக்கு கொடுத்துவிட்டு, மீதியை கூண்டு தயாரிப்புக்கு செலவிடுகிறார். சொந்த செலவில் கூண்டுகளை தயாரித்தாலும் இதை இலவசமாகவே வழங்குகிறார். பொதுஇடங்கள், அரசு பள்ளி வளாகங்களில் தொடங்கி தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை வரை குருவிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: மகளுக்காக தந்தை செய்த செயல் - கண்கலங்க வைக்கும் புகைப்படம்

மாணவர்களுடன் அருண்


புதுச்சேரியில் சில முக்கிய இடங்களில் குருவிகளுக்காக இயற்கை உணவு பெட்டிகளையும் வைத்து பராமரித்து வருகிறேன். மன அழுத்தம் குறைய குருவிகளோடு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும். புதுச்சேரி போலீசார் அதிகளவில்  கூண்டு வாங்கி குருவிகளுக்கு வாழ்விடம் கொடுத்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளால் ஆயிரக்கணக்கில்  குருவிகள் உருவாகியியுள்ளன. புதுச்சேரியின் அனைத்து வழிபாட்டுத்தளங்களிலும் மன அமைதிக்கு வரும் பக்தர்களுக்காக வாத்து உட்பட பறவைகளை இயற்கையாக வளரச்செய்ய வேண்டும் என அருண் கோருகிறார்.

சிட்டுக்குருவி


கூடி வாழ்ந்தால் மட்டுமல்ல,கூண்டு கொடுத்தாலும் கோடி நன்மைதான் என கூறும் அருணுடைய வயது 36. இவரது சேவையை முழு மனதோடு ஏற்கும் பெண்ணையே மணப்பேன் என காத்திருக்கிறார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Birds, Puducherry, World Sparrow Day

அடுத்த செய்தி