அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்திய ரங்கசாமி!

ரங்கசாமி வழிபாடு

ரங்கசாமி, முதல்வராக பொறுப்பேற்ற போதிலும் , சபாநாயகர், அமைச்சர் பதவி பங்கீட்டில் கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் உடன்பாடு ஏற்படாததால் அமைச்சரவை பதவி ஏற்கவில்லை

 • Share this:
  புதுச்சேரியில் பல்வேறு அரசியல் பரபரப்புகள் அரங்கேறி வரும் சூழலில் முதலமைச்சர் ரங்கசாமி,தனது குலதெய்வ கோயிலில் குதிரை காலில் சீட்டு கட்டி வழிபாடு நடத்தினார்.

  ஆன்மிகத்தில் கடும் நம்பிக்கை கொண்டுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் முருகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவார். அரசியலில் எந்த முடிவு
  எடுப்பதற்கு முன்பாக, சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி ஜீவசமாதிக்கு சென்று வருவார். மேலும் திலாஸ்பேட்டையில் தனது வீட்டில் அப்பா பைத்தியம் சுவாமிக்கு கோயில் கட்டியுள்ளார். இங்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கி வருகிறார்.

  ரங்கசாமி, முதல்வராக பொறுப்பேற்ற போதிலும் , சபாநாயகர், அமைச்சர் பதவி பங்கீட்டில் கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் உடன்பாடு ஏற்படாததால் அமைச்சரவை பதவி ஏற்கவில்லை. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி  அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உள்ள தனது குல தெய்வ கோவிலான பூரணி புஷ்கலா அய்யனாரப்பன் கோவிலுக்கு ரங்கசாமி சென்று சிறப்பு பூஜை செய்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  பின் கோயிலில் உள்ள அய்யனார் குதிரை சிலையின் காலில், தனது வேண்டுதல் சீட்டை கட்டினார். அமைச்சரவை இன்னும் பதவி ஏற்காத நிலையில் முதல்வரின் தெய்வ வழிபாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  மேலும் படிக்க.. பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் ஜனநாயகத்தை  கேலி கூத்தாக்கிறது-நாராயணசாமி விமர்சனம்..

  புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றார். எனினும், அமைச்சர் பதவி தொடர்பாக கூட்டணியில் குழப்பம் நிலவியது. இதையடுத்து பாஜக  மேல்மட்ட தலைவர்கள் ரங்கசாமியை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக அமைச்சரவை பதவியேற்பு விரைவில் நடைபெறும் என  கூறப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: