• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி: நம்பிக்கைத் தரும் புதிய திட்டங்கள்

புதுச்சேரி சிறையில் கைதிகளுக்கு தொழில் பயிற்சி: நம்பிக்கைத் தரும் புதிய திட்டங்கள்

புதுச்சேரி சிறைச்சாலை

புதுச்சேரி சிறைச்சாலை

புதுச்சேரி சிறைச்சாலையில் கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  • Share this:
புதுச்சேரியின் மத்திய சிறை காலாப்பட்டில் உள்ளது. இங்கு 350 க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும் விசாரணை கைதிகளும் உள்ளனர். இங்கு யோக கலை, சிலம்பு பயிற்சி, தியானம் என்று கைதிகளுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சி அளித்து புதிய நம்பிக்கை தரும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளியே சென்றாலும் சிலர் குற்றச் செயலில் ஈடுபடுவதைத் தொடர் கதையாக வைத்துள்ளனர். இதைத் தடுக்கும் வகையில் கைதிகளுக்கு மறுவாழ்வு அளித்து வாழ்க்கையில்  சீர்திருத்தம் மேற்கொள்ள ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி புதிய திட்டத்தை துவக்கியுள்ளது.

புதிய நம்பிக்கை தொடக்க விழா சிறை வளாகத்தில் நடந்தது. சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் வரவேற்க சிறை துறை முதன்மை கண்காணிப்பாளர் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறை ஐ.ஜி ரவிதீப்சிங் சாகர் சிறப்புரையாற்றிட அரபிந்தோ சொசைட்டி நிர்வாக உறுப்பினர் விஜய் போடார், விவேகானந்தா சமுதாய கல்லுாரி நிறுவனர் சுப்ரமணியன், சத்யா சிறப்பு பள்ளி இயக்குநர் சித்ரஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி சிறை


நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறை துறை  துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தார். கைதிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் யோகா, சிலம்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன் மாதிரி சிறைச்சாலையாக புதுச்சேரி சிறைச்சாலை மாற்றப்படுகிறது.  வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிப்பு, பைக், மோட்டார் மெக்கானிக், கம்ப்யூட்டர் பயிற்சி, மாடு மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிக்கும் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் மூலம் சிறையில் கிடைக்கும் ஊதியம் மட்டும் இன்றி, கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும். சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே சென்றால், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிற்கான திறன் கற்று தரப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் வீட்டு அலங்கார பொருட்கள், அரபிந்தோ சொசைட்டி மூலம் கடைகள் மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானம், கைதியின் குடும்ப உறுப்பினர் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகள் மூலம் கைதிகளுக்கு தன்னம்பிக்கை, திறன் வளர்க்கவும், ஆன்மீக வழியில் மனதை கட்டுவதிற்குள் வைத்து கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: