Home /News /national /

முதல்வர் ரங்கசாமியா.. நாராயணசாமியா? கன்பியூஸ் ஆன பாதிரியார்..

முதல்வர் ரங்கசாமியா.. நாராயணசாமியா? கன்பியூஸ் ஆன பாதிரியார்..

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

விழாவை தொகுத்து வழங்கிய பாதிரியார் ஒருவர், முதலமைச்சர் ரங்கசாமி என்பதற்கு பதிலாக முதலமைச்சர் நாராயணசாமி மிகவும் திறமையானவர், எளிமையானவர் மக்களிடத்தில் நன் மதிப்பை பெற்றவர் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது மேடையிலிருந்த சபாநாயகர் செல்வம் உள்பட சிலர் எழுந்து முதல் அமைச்சர் நாராயணசாமி இல்லை ரங்கசாமி என்று கூறினர்.

மேலும் படிக்கவும் ...
புதிய பேராயர் பதவியேற்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் பெயரை ரங்கசாமி என கூறுவதற்கு பதில் நாராயணசாமி என கூறியதால்  பரபரப்பு ஏற்பட்டது. . இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி புதிதாக பதவியேற்ற பேராயருக்கு சால்வை அணிவித்து விட்டு விழா மேடையில் இருந்து  அமைதியாக புன்னகைத்தவாறு வெளியேறினார்.

புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டம்  400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடங்கி நீண்ட நெடிய வரலாறும் பாரம்பரியமும் கொண்டதாகும். மேலும் இது கோரமண்டல் மிஷன் மற்றும் மலபார் மிஷன் என்று அழைக்கப்பட்டது. 1886ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி - கடலூர் மாவட்டம் உயர்மறைமாவட்டம் ஆக உயர்த்தப்பட்டது.

இதுவரை 13  பேராயர்கள் இந்த திரு அவையை நடத்திவந்தனர். இந்தநிலையில் 14-வது உயர் மறை மாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் பதவி ஏற்பு நிகழ்ச்சி உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்த பேராயர்கள், ஆயர்களும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டு பேராயரை வரவேற்றார்கள்.



இதில் சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். விழாவை தொகுத்து வழங்கிய பாதிரியார் ஒருவர், முதலமைச்சர் ரங்கசாமி என்பதற்கு பதிலாக முதலமைச்சர் நாராயணசாமி மிகவும் திறமையானவர், எளிமையானவர் மக்களிடத்தில் நன் மதிப்பை பெற்றவர் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது மேடையிலிருந்த சபாநாயகர் செல்வம் உள்பட சிலர் எழுந்து முதல் அமைச்சர் நாராயணசாமி இல்லை ரங்கசாமி என்று சொன்னவுடன் பேசி கொண்டிருந்த பேராயர் மன்னிக்கவும் முதலமைச்சரின் பெயரை தவறாக உச்சரித்து விட்டேன் என்றார்.



இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி எழுந்து நின்று தனது அருகில் இருந்த புதிதாக பதவியேற்ற பேராயருக்கு சால்வை அணிவித்து விட்டு  பாதியிலேயே விழா மேடையில் இருந்து  புன்னகைத்த வாறே அமைதியாக வெளியேறினார். இதனையடுத்து சபாநாயகர் செல்வமும் விழாவில் இருந்து வெளியேறினார். இதனால் சிறிது நேரம் விழா மேடை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி