Home /News /national /

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

பேருந்து நிலையத்திலிருந்து கடற்கரைக்கு செல்ல அரசு சார்பில் 20 இலவச பேருந்துகள் இயக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக 20 இடங்களில் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதே இடத்தில் வைத்து அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புத்தாண்டிற்கு புதுச்சேரிக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    கடற்கரை சாலையில் 31 ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ். வி .பட்டேல் சாலை, செஞ்சி சாலை, நேரு வீதி, புஸ்ஸி வீதி, மற்றும் சுப்பையா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Also read... ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம்!

    Also read... அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்படும்!

    பேருந்து நிலையத்திலிருந்து கடற்கரைக்கு செல்ல அரசு சார்பில் 20 இலவச பேருந்துகள் இயக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக 20 இடங்களில் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கும், முகக்கவசம் உள்ளிட்ட வழிகாட்ட நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கும் ஸ்பாட் பைன் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Puducherry

    அடுத்த செய்தி