பெருமாள் கோயிலுக்குள் குடிப்பெயர்ந்த காவல் நிலையம்..!
புதுச்சேரியில் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

- News18 Tamil
- Last Updated: August 1, 2020, 9:48 PM IST
புதுச்சேரியில் காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல் படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது. காவல் நிலையத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் முதல் ஊர்க்காவல் படை வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் ஏதேனும் பிரச்சனை என்றால் பொதுமக்கள் பத்து கிலோமீட்டர் தூரமுள்ள திருக்கனூர் காவல் நிலையத்திற்கு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருக்கனூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு தலைமை காவலர் மற்றும் ஒரு காவலர் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
காவல் நிலையம் மூடப்பட்டு உள்ளதால் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் தற்காலிக காவல் நிலையம் இயங்கி வருகிறது.உடனடியாக நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகளுக்கு சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்..