புதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...!

புதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...!
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா தடுப்பு செலவிற்காக புதுச்சேரியில் பெட்ரோல்- டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் - டீசலுக்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி போக்குவரத்து செலவினை ஈடுகட்டும் வகையில் மத்திய கலால் வரிவிதிக்கப்படுகிறது. அதற்கு மேல் மாநில அரசு மதிப்பு கூட்டு வரியாக, வாட் வரியை குறிப்பிட்ட சதவீதத்தில் விதித்து வருமானம் ஈட்டி வருகின்றன.

இந்த வாட் வரி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். புதுச்சேரியில் தற்போது பெட்ரோலுக்கு 21.15 சதவீதமும், டீசலுக்கு 17.15 சதவீதமும் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  கொரோனா செலவினத்திற்காக பெட்ரோல்- டீசலுக்கான வாட் வரியை ஒரு சதவீதம்  புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ளது.


இது தொடர்பாக புதுச்சேரி நிதித்துறை செயலர் சுர்பீங் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், புதுச்சேரி மதிப்பு கூட்டு வரி சட்டம்-2007ன் படி பொது மக்கள் நலன் கருதி, பெட்ரோலுக்கு 22.15 சதவீதமும் டீசலுக்கு 18.15 சதவீதமாக வசூலிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூடுதலாக பெறப்படும் வருமானம் சுகாதாரத் துறையின் கொரோனா தடுப்பு பணிக்கு நிதித்துறை வழியாக சேர்க்கப்படும். இந்த வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading